Enable Javscript for better performance
போடி அருகே கிராமத்தில் தூய்மைப் பணி- Dinamani

சுடச்சுட

    

    போடி பொட்டல்களம் கிராமத்தில் மத்திய அரசின் நேரு யுவகேந்திரா அமைப்பின் கீழ் இயங்கும் விவேகானந்தர் இளைஞர் மன்றம் சார்பில் தூய்மை பணி, மன்றத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. 
    இதில் கிராமத்தில் உள்ள தெருக்கள் முழுவதும் நெகிழி கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன. பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் உதவியுடன் சாக்கடைகள் தூர்வாரப்பட்டன. மேலும் தெருக்களின் ஓரங்களில் முளைத்திருந்த செடிகள் அகற்றப்பட்டன. 
    குடிநீர் குழாய் அருகில் தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து இளைஞர் மன்ற நிர்வாகிகள் வீடு வீடாக சென்று தூய்மை மற்றும் சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
    நிகழ்ச்சியில் விவேகானந்தர் இளைஞர் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai