Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகளுக்கு புகைப்பட தொழில்நுட்பப் பயிற்சி: நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகளுக்கு புகைப்பட தொழில்நுட்பப் பயிற்சி: நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 25th July 2019 07:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டத்தில்  இலவச புகைப்பட தொழில்நுட்பப் பயிற்சியில் சேர விரும்பும் மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 26) விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெறும் ஒரு மாத கால இலவச புகைப்பட தொழில்நுட்ப பயிற்சியில் சேர 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட கை, கால் ஊனமுற்ற, செவித் திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவர். பயிற்சி நிறைவில் ரூ.1,000 உதவித் தொகை வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்படும்.
    இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் மாற்றுத் திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை, மதிப்பெண் சான்று, பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு பாஸ் புத்தகம், குடும்ப அட்டை, 3 மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) க்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து, நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai