முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
கூடலூரில் மது பாட்டில்கள் விற்றவர் கைது
By DIN | Published On : 30th July 2019 08:53 AM | Last Updated : 30th July 2019 08:53 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் கூடலூரில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்து, 40 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கூடலூர் தெற்கு காவல் நிலைய பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் டாஸ்மாக் கடையிலிருந்து மொத்தமாக வாங்கி காலை 12 மணி வரையிலும், மற்றும் இரவு 10 மணிக்கு மேல் கூடுதல் விலைக்கு, விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்து.
அதன் பேரில் தெற்கு காவல் நிலைய போலீஸார் காஞ்சிமரத்துறை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது முருகன் (50) என்பவர் போலீஸாரைக் கண்டதும் ஓடினார்.
அவரை போலீஸார் பிடித்து விசாரணை செய்த போது அருகே புதர் மறைவில் வைத்திருந்த 40மதுபாட்டில்களை கைப்பற்றினர். மேலும் இது தொடர்பாக போலீஸார், முருகனை கைது செய்தனர்.