முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
பெரியகுளத்தில் வராக நதி தூய்மையை வலியுறுத்தி இளைஞர்கள் பிரசாரம்
By DIN | Published On : 30th July 2019 08:51 AM | Last Updated : 30th July 2019 08:51 AM | அ+அ அ- |

பெரியகுளம் முதல் குள்ளப்புரம் வரை வராகநதி தூய்மையை வலியுறுத்தி இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளத்தில் மாசடைந்துள்ள வராகநதி தூய்மையை வலியுறுத்தி விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை பெரியகுளம், வராகநதி ஆடுபாலத்தில் இக் கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து முகாம் மற்றும் விழிப்புணர்வு சைக்கிள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பிரசாரத்தை தென்கரை காவல் ஆய்வாளர் அசோக் தொடக்கி வைத்தார். விழுதுகள் இளைஞர் மன்ற பொருளாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். விழுதுகள் மன்ற நிர்வாகி பொறியாளர் என்.நௌஷாத் வரவேற்றார். சில்வார்பட்டி அரசுப் பள்ளி தலைமையாசிரியர் மோகன் வாழ்த்திப் பேசினார். விழிப்புணர்வு சைக்கிள் பிரசாரம் பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம் வழியாக குள்ளப்புரத்தை வந்தடைந்து. இதில் மேல்மங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ரெங்கராஜ் , பெரியகுளம் நகர் நலக் கமிட்டியினர் மற்றும் விழுதுகள் இளைஞர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.