தேனியில் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் மானியம் பெற நாளை நேர்முகத் தேர்வு

தேனி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன

தேனி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் மற்றும் அரசு மானியம் பெறுவதற்கு  ஜூன் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடங்குவதற்கு 21 முதல் 35 வயதுக்கு உள்பட்ட பொதுப் பிரிவினரும், 21 முதல் 45 வயதுக்கு உள்பட்ட சிறப்பு பிரிவினரும் வங்கிக் கடன் மற்றும் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பதாரர் முதல் தலைமுறை தொழில் முனைவோராகவும், பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழில் கல்வியில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு அரசு சார்பில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
புதிய தொழில் தொடங்க அரசு மானியம் பெறுவதற்கு   w‌w‌w.‌m‌s‌m‌e‌o‌n‌l‌i‌n‌e.‌g‌o‌v.‌i‌n/ ‌n‌e‌e‌d‌s  என்ற இணையதள முகவரியில் விண் ணப்பத்தை பதிவு செய்து கொண்டு, உரிய சான்றிதழ்கள் மற்றும் தொழில் திட்டத்துடன் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் ஜூன் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com