கம்பம் மேல்நிலைப் பள்ளியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
By DIN | Published On : 14th June 2019 07:14 AM | Last Updated : 14th June 2019 07:14 AM | அ+அ அ- |

உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் கம்பம் சக்திவிநாயகர் மெட்ரிக். மேல் நிலைப்பள்ளியில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு பள்ளித் தாளாளர் வி.அச்சுதநாகசுந்தர் தலைமை வகித்தார். செயலர் கவிதா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்கம்பம் சிரஞ்சீவி, சின்னமனூர் மணிமாறன், உத்தமபாளையம் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு, தரமானஉணவுப் பொருள்களை பயன்படுத்துவது, காலாவதியான பொருள்களைகண்டறிதல், செயற்கை சாயம் சேர்த்த உணவுப்பொருள்களை தவிர்ப்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கினர். ஆசிரியர் சித்தேந்திரன் நன்றி கூறினார்.