பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் கருத்தரங்கு

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் திங்கள்கிழமை தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது.

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் திங்கள்கிழமை தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது.
மதுரை அண்ணா பல்கலைக்கழக தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இக் கருத்தரங்குக்கு, கல்லூரிச் செயலர் கே.எஸ். காசிபிரபு தலைமை வகித்தார். இணைச் செயலர் ராஜ்குமார், மதுரை அண்ணா பல்கலைக்கழக தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் அறிவழகன், கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     இதில், புதிய தொழில் திட்டங்கள், தொழில்நுட்பப் பயிற்சிகள், தொழில் நிறுவனம் தொடங்குவதற்கான உரிமம் பெறுதல், வங்கிக் கடன் மற்றும் அரசு மானிய உதவி திட்டங்கள் ஆகியன குறித்து, மதுரை அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் லட்சுமணன், தேனி தனியார் தொழில் நிறுவன உரிமையாளர் தணிகைவேல் முருகன் ஆகியோர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com