தேனியில் "நீட்' தேர்வு முறையை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 22nd June 2019 07:24 AM | Last Updated : 22nd June 2019 07:24 AM | அ+அ அ- |

தேனியில் நீட் தேர்வு முறையை கண்டித்து, திமுக மாவட்ட மாணவரணி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தேனி பங்களாமேடு திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர் சேகர், தேனி நகர திமுக பொறுப்பாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு முறை ரத்து செய்யவேண்டும், மத்திய கல்விக் கொள்கை என்ற பெயரில் தாய் மொழி கல்வியை தடை செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில், திமுக மாவட்டப் பொறுப்பாளர் நா. ராமகிருஷ்ணன், முன்னாள் மாவட்டச் செயலர் எல். மூக்கையா, சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆண்டிபட்டி ஏ. மகாராஜன், பெரியகுளம் கே.எஸ். சரவணக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.