தேனியில் பெண் தொழிலாளி சந்தேக மரணம்: போலீஸ் விசாரணை
By DIN | Published On : 23rd June 2019 12:48 AM | Last Updated : 23rd June 2019 12:48 AM | அ+அ அ- |

தேனியில் பெண் தொழிலாளி சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்ததாக சனிக்கிழமை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி, கம்போஸ்டு ஓடைத் தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன் மனைவி சாந்தி (55). இவர், தேனி உழவர் சந்தையில் உள்ள காய்கறிக் கடைகளில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், உழவர் சந்தை அருகே சாந்தி நைலான் கயிற்றில் வாய் கட்டப்பட்ட நிலையில், சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சாந்தியின் சகோதரர் சுகுமார் அளித்தப் புகாரின் பேரில் தேனி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.