சுடச்சுட

    

    ஆண்டிபட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 26th June 2019 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்புகள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி திங்கள்கிழமை பெற்றோர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
     தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகி லதா மற்றும் பெற்றோர்கள், ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் அளித்த மனு விபரம்: ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த 2018 ஆம் ஆண்டு வரை 78 மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். அப்போது பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணியில் இருந்தனர். இந்த ஆண்டு இப் பள்ளியில் புதிதாக 92 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு, தற்போது மொத்தம் 170 பேர் பள்ளியில் படித்து வருகின்றனர். ஆனால், இப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை ஒருவர் அங்கன்வாடி மையத்திற்கும், இரண்டு ஆசிரியைகள் வேறு பள்ளிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு விட்டனர்.   இந்த நிலையில், தற்போது இரண்டு வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர் வீதம் வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கிறது. எனவே, ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு போதிய ஆசிரியர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai