சுடச்சுட

  

  கூட்டுறவு பட்டயப் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை:  ஜூலை 10-க்குள் விண்ணப்பிக்கலாம்

  By DIN  |   Published on : 26th June 2019 08:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் தேனி கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலையத்தில் கணினி மேலாண்மை மற்றும் நகை மதிப்பீட்டாளர் பட்டயப் பயிற்சியில் சேர ஜூலை 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
         இது குறித்து தேனி மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் முத்துக்குமாரசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு: தேனி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் கணினி மேலாண்மை, நகை மதிப்பீட்டாளர் ஆகிய பட்டயப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்தப் பயிற்சியில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, குறைந்தபட்சம்  17 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். 
      இந்தப் பட்டயப் பயிற்சி சான்றிதழை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
       தகுதியுள்ளவர்கள், ஆண்டிபட்டியில் உள்ள தேனி கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலையத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஜூன் 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சி வகுப்புகள் ஜூலை 15-ஆம் தேதி தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai