சுடச்சுட

  

  தாழ்வாகச் சென்ற உயரழுத்த மின்கம்பி மரத்தில் கட்டிவைப்பு: கம்பம் - சுருளிப்பட்டி சாலையில் அலட்சியம்

  By DIN  |   Published on : 26th June 2019 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மின் கம்பிகளை புளிய மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
   தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து  சுருளிப்பட்டி செல்லும் சாலையில் வலது புறம் உயரழுத்த மின் கம்பிகள் செல்கின்றன.
   இந்த கம்பிகள் மிகவும் தாழ்வாகச் சென்றதால் பொதுமக்கள், வாகனங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. இதற்கு மின் வாரியத்தினர் மாற்று ஏற்பாடு செய்யாமல், மின் கம்பிகளை சுருட்டி புளியமரக் கிளைகளில் கட்டி வைத்துள்ளனர். 
  இது மரங்களுக்கு சேதம் விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.  
  தற்போது சாரல் மழைக்காலமாதலால் மின் கசிவு ஏற்பட  அதிக வாய்ப்பும் உள்ளது. எனவே மின்சார வாரியத்தினர் புளிய மரத்தில் கட்டி வைத்துள்ள மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai