சுடச்சுட

  

  தேனி மாவட்டத்தில் துணை ஆட்சியர் நிலையில் பணியாற்றிய 3 அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
        தேனி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலராகப் பணியாற்றிய எம். சாந்திக்கு, புதிய பணியிடம் ஒதுக்காததால் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக, தேனி மாவட்ட  தாட்கோ மேலாளராகப் பணியாற்றிய மு. முருகசெல்வி, தேனி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், தேனி மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியராகப் பணியாற்றிய ரா. கண்ணகி, மதுரை மாவட்டம் மேலூர் வருவாய் கோட்டாட்சியராகப் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
      இதற்கான உத்தரவை, அரசு கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai