போடி பள்ளியில் புதிய கற்பித்தல் முறை அறிமுகம்

போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் புதிய கற்பித்தல் முறை அறிமுக நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் புதிய கற்பித்தல் முறை அறிமுக நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் கற்பித்தல் ஆர்வத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மொழியை கற்க பல்வேறு முறைகள் கையாளப்பட்டு வரும் நிலையில், ஆங்கில வார்த்தைகளை சரியான முறையில் கற்க புதிய முயற்சியாக ஜாலி போனிக்ஸ் எனப்படும் உச்சரிப்பு ஒலிப்புடன் கற்பித்தல் முறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டது.
இதேபோல் பென்சில், பேனாவை எவ்வாறு பிடித்து எழுதினால் எழுத்துக்கள் அழகாக தெரியும் என்பதை கற்க சாய்வெழுத்து முறை கற்றுத் தரப்பட்டது. இந்த இரண்டு முறைகளும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்டது.  இதன் மூலம் மாணவர்கள் ஆர்வமுடன் கல்வி பயின்று வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் இரா ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com