வெளிநாட்டு வேலைக்கு ஆள்களை அனுப்பும் முகவர் கொலை வழக்கு: தற்கொலைக்கு முயன்ற குற்றவாளி கைது

சின்னமனூர் அருகே வெளிநாட்டு வேலைக்கு ஆள்களை அனுப்பும் முகவரை கொலை செய்த சுமை தூக்கும்

சின்னமனூர் அருகே வெளிநாட்டு வேலைக்கு ஆள்களை அனுப்பும் முகவரை கொலை செய்த சுமை தூக்கும் தொழிலாளி தற்கொலைக்கு முயன்று குணமடைந்ததை அடுத்து, போலீஸார் அவரை திங்கள்கிழமை கைது செய்தனர்.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே சீலையம்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த காசி முகம்மது மகன் அஜ்மல்கான் (40). சுமை தூக்கும் தொழிலாளியான இவர், வறுமை காரணமாக தனது மனைவி ஆசாபானுவை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கொத்தவச்சாவடியைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் மூலம் வெளிநாட்டில் வீட்டு வேலைக்காக அனுப்பிவைத்துள்ளார். 
அதன்பின்னர், வெளிநாட்டிலிருந்து  மனைவி அனுப்பிய பணத்தை அஜ்மல்கான் மது குடித்து ஊதாரித்தனமாக செலவு செய்ததால், அவர் பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டாராம்.
இதனால், அஜ்மல்கானுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர், தனது மனைவியை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பாமல் கோவையிலேயே தங்க வைத்து தனது மகன் விக்னேஷ்குமாருக்கு முகவர் கருணாநிதி திருமணம் செய்து வைத்துவிட்டதாகவும், அதனாலேயே பணம் அனுப்புவதை மனைவி நிறுத்திவிட்டதாகவும் அஜ்மல்கானுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
 எனவே, கருணாநிதி தன்னை  ஏமாற்றி தனது குடும்பத்தை சீரழித்துவிட்டாதாக எண்ணிய அஜ்மல்கான், சின்னமனூர் அருகேயுள்ள சீலையம்பட்டிக்கு அவரை வரவழைத்து, திட்டமிட்டபடி  கொலை செய்து வீட்டின் முன்பாக புதைத்துள்ளார். 
அதையடுத்து, போலீஸாருக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அஜ்மல்கானை, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 
தற்போது, அவர் முற்றிலும் குணமடைந்துவிட்ட நிலையில், சின்னமனூர் போலீஸார் அவரை திங்கள்கிழமை கைது செய்து, தேனி மாவட்டச் சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com