சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர் கைது
By DIN | Published On : 04th March 2019 07:43 AM | Last Updated : 04th March 2019 07:43 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ஆண்டிபட்டி அருகே உள்ள டி.ராஜகோபாலன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் நாகராஜ் (27). கூலி வேலை செய்து வருகிறார். இவர் அதே ஊரைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி, நெருங்கி பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன், அச்சிறுமி திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதையடுத்து சிறுமியிடம் விசாரித்தபோது, நாகராஜ் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து, நாகராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.