தேனி மக்களவைத் தொகுதியில் தேர்தல் கண்காணிப்புக் குழு வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தம்

தேனி மக்களவைத் தொகுதி தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு

தேனி மக்களவைத் தொகுதி தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு மற்றும் விடியோ கண்காணிப்புக் குழுவினரின் வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ்.கருவி பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதிக்கு 6 பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுகள் மற்றும் 3 விடியோ கண்காணிப்புக் குழுக்கள், பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தலா 3 பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு மற்றும் விடியோ கண்காணிப்புக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழு அலுவலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறன்றனர். தேர்தல் கண்காணிப்புக் குழுவினரின் வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்த, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஜி.பி.ஆர்.எஸ். கருவி வந்து சேராததால், தேர்தல் கண்காணிப்புக் குழுவினரின் வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பயன்படுத்தும் வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் பயன்படுத்தும் 13 வாகனங்களுக்கு ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தும் பணி நடைபெற்றது.
தேர்தல் கண்காணிப்பு குழுவினரின் வாகனங்களில் உள்ள ஜி.பி.ஆர்.எஸ். கருவியை, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை கணினியில் இணைக்கும் பணி நடைபெற்று வருவதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com