ஆண்டிபட்டி, போடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5.46 லட்சம் பறிமுதல்

கேரளத்திலிருந்தும் மற்றும் கேரளத்துக்கும் காரில் கொண்டு செல்லப்பட்ட மொத்தம் ரூ. 5 லட்சத்து 46 ஆயிரம்

கேரளத்திலிருந்தும் மற்றும் கேரளத்துக்கும் காரில் கொண்டு செல்லப்பட்ட மொத்தம் ரூ. 5 லட்சத்து 46 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். 
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வம் மற்றும் காவல் சார்பு-ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில், பறக்கும்படை அலுவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னையிலிருந்து மதுரை வழியாக ஆண்டிபட்டி வந்த  காரை மறித்து சோதனையிட்டனர். அதில், ரூ. 4,06,300 பணம் இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், சென்னை திருமுக்கூர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் மனோஜ் (36). இவரது பூர்வீகமான கேரளத்திலுள்ள  வாஹமான் என்ற இடத்தில் புதிதாக நிலம் வாங்குவதற்காக முன்பணம் கொண்டு சென்றுள்ளார். 
ஆனால், அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால், அவற்றை சமர்ப்பித்து விட்டு பணத்தை பெற்றுச் செல்லுமாறு அதிகாரிகள் கூறினர். பின்னர், கைப்
பற்றப்பட்ட தொகையை ஆண்டிபட்டி வட்டாட்சியரிடம் 
ஒப்படைத்தனர்.
போடி: தமிழக-கேரள எல்லையில், போடி-மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் முந்தல் சோதனைச் சாவடி அருகே போடி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி சின்னவெளியப்பன் தலைமையில், அலுவலர்கள் போலீஸாருடன் இணைந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கேரளத்திலிருந்து வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். 
கேரள மாநிலம் பேத்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டி வந்த காரில், உரிய ஆவணங்களின்றி ரூ.1.40 லட்சம் இருந்ததை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை திரும்பப் பெற்றுச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். போடி சார்-நிலை கருவூலகத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com