கம்பம் கிழக்கு வனச் சரகத்தில் 6 பெண் வனக் காவலர்கள் நியமனம்

தேனி மாவட்டம், கம்பம் கிழக்கு வனச் சரகத்தில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 6 பெண் வனக் காவலர்கள் திங்கள்கிழமை பணியில் சேர்ந்தனர்.

தேனி மாவட்டம், கம்பம் கிழக்கு வனச் சரகத்தில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 6 பெண் வனக் காவலர்கள் திங்கள்கிழமை பணியில் சேர்ந்தனர்.
சில மாதங்களுக்கு முன், வனக் காவலர்களுக்கான தேர்வு நடைபெற்றது. அதில், பெண்களும் பங்கேற்றனர். தேர்வு பெற்றவர்கள் தற்போது பணியில் சேர்ந்து வருகின்றனர். அதன்படி, தேனி மாவட்டம் மேகமலை வனச் சரணாலயப் பகுதியில் உள்ள கம்பம் கிழக்கு வனச் சரகத்தில் மட்டும் 6 பெண் வனக் காவலர்கள் பணியில் சேர்ந்தனர்.
இது குறித்து வனத் துறை ஊழியர் ஒருவர் கூறியது: 
முதன்முறையாக பெண் வனக் காவலர்கள் பணியில் சேர்ந்துள்ளனர்.  இவர்களுக்கு, பறக்கும் படை பிரிவில் பணி வழங்கப்படும் எனத் தெரிகிறது. தேனி, மேகமலை ஆகிய இரு பிரிவுகளிலும் இதேபோல் பெண் வனக் காவலர்கள் பணியில் சேர்ந்துள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com