Enable Javscript for better performance
ஆண்டிபட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல்: அ.தி.மு.க- தி.மு.க உள்பட  18 வேட்புமனுக்கள் ஏற்பு: 8 மனுக்கள் ந- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல்: அ.தி.மு.க- தி.மு.க உள்பட  18 வேட்புமனுக்கள் ஏற்பு: 8 மனுக்கள் நிராகரிப்பு

    By DIN  |   Published on : 28th March 2019 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை புதன்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் உள்பட 18 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 8 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது. இந்நிலையில் அதிமுக, திமுக, அமமுக உள்பட 26 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் அந்த மனுக்கள் மீதான பரிசீலனை ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் பிரபாகர ரெட்டி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணகி பரிசீலனை செய்தார். அப்போது திமுக மாற்று வேட்பாளர் இரண்டு பேர், அதிமுக மாற்று வேட்பாளர் மூன்று பேர், நாம் தமிழர் கட்சி மாற்று வேட்பாளர் ஒருவர் உள்பட சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு பேர் என 8 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
    இந்நிலையில் தற்போது அதிமுக வேட்பாளர் லோகிராஜன், திமுக வேட்பாளர் மகாராசன், அமமுக வேட்பாளர் ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருணாதேவி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அழகர்சாமி ஆகியோர் உட்பட 18 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வியாழக்கிழமை வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். இதனையடுத்து வெள்ளிக்கிழமை இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு, அமமுக உட்பட சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் திமுக ,அதிமுக, அமமுக வேட்பாளர்கள் உள்பட சுயேச்சை வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai