Enable Javscript for better performance
கேரளத்துக்கு மாட்டு வண்டியில் ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கேரளத்துக்கு மாட்டு வண்டியில் ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது

    By DIN  |   Published on : 28th March 2019 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் இருந்து  மாட்டு வண்டியில் கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்திய இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து 1000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
    உத்தமபாளையம் வட்டாரம் கூடலூரில் இருந்து குமுளி மலைப்பாதை வழியாக மாட்டு வண்டிகளில் ரேஷன் அரிசி கடத்துவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் அறிவுறுத்தலின்படி, உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் குமுளி மலைப்பாதையில் சோதனையிட்டனர்.
    அப்போது, அவ்வழியாக சென்ற இரு மாட்டுவண்டிகளை சோதனை செய்ததில் 1,038 கிலோ ரேஷன் அரிசியை கேரளத்துக்கு 21 சிறிய மூட்டைகளில் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் முருகேசன், கடத்தலில் ஈடுபட்ட கூடலூரை சேர்ந்த ராஜாங்கம் மற்றும் அஜித்குமாரை ஆகியோரை கைது செய்தனர். மேலும், 2 மாட்டு வண்டிகள் மற்றும் 4 மாடுகளை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai