Enable Javscript for better performance
பெரியகுளம் அருகே வாகனம் மோதி பெண் சாவு: உறவினர்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    பெரியகுளம் அருகே வாகனம் மோதி பெண் சாவு: உறவினர்கள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 28th March 2019 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியகுளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி பெண்ணின் சடலத்துடன் உறவினர்கள் புதன்கிழமை தேனி- பெரியகுளம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
     பெரியகுளம் அருகே கைலாசபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மனைவி முத்தழகு (30). இவர் செவ்வாய்க்கிழமை மாலை கைலாசப்பட்டியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். 
    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    இந்நிலையில் இறந்தவருக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும். விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் எனக் கூறி அவரது உறவினர்கள் சடலத்துடன் புதன்கிழமை மாலை தேனி- பெரியகுளம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    இவர்களுடன் போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சாலை மறியல் இரவு வரை நீடித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai