Enable Javscript for better performance
போடியில் அ.தி.மு.க. தீவிர தேர்தல் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    போடி பகுதியில் அ.தி.மு.க.வினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
    தேனி மக்களவை தொகுதியில் வேட்பாளர்கள் யார், யார் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. இதனிடையே போடி பகுதியில் இன்னும் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கவில்லை. அ.தி.மு.க.வினர் மட்டும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சந்திப்பு கூட்டம் நடத்தியுள்ளனர். அதேபோல் கேரளத்திலிருந்து ஏராளமான ஜீப்புகள் வாடகைக்கு வரவழைக்கப்பட்டு அதில் ஒலிபெருக்கி அமைத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளையும் அ.தி.மு.க.வினர் செய்து வருகின்றனர். ஆனால் தி.மு.க. கூட்டணி கட்சியினரோ, அ.ம.மு.க. கட்சியினரோ இன்னும் தேர்தல் வேலைகளில் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இதுவரை போடிக்கு வந்து கட்சி நிர்வாகிகளையோ, கூட்டணி கட்சி நிர்வாகிகளையோ சந்திக்காத நிலையில் தற்போது தி.மு.க.வினர் ஒரு சில வார்டுகளில் மட்டுமே வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
     இதேபோல் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் போடி பகுதியில் வாகனங்களில் ஊர்வலமாக வந்தார்.  அதன் பின் இதுவரை போடி பகுதிக்கு அவர் வரவில்லை. இதேபோல் புதன்கிழமை தேனி மாவட்டத்திற்கு வந்த தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினும் போடி பகுதிக்கு வரவில்லை. மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனும் பிரசாரத்திற்கு வரும்போது போடிக்கு வரவில்லை.
     அ.தி.மு.க. கூட்டணியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை எனக்கூறி கூட்டணி கட்சியினர் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் உள்ளனர். இதனால் போடி பகுதியில் தேர்தல் களம் சூடு பிடிக்காததால் கட்சி தொண்டர்கள் மத்தியில் சோர்வு காணப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai