சின்னமனூர் அருகே  15 பவுன் நகைகள்  திருட்டு

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே வியாழக்கிழமை இரவு வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 15 பவுன் நகையை திருடிச் சென்றனர். 

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே வியாழக்கிழமை இரவு வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 15 பவுன் நகையை திருடிச் சென்றனர். 
சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை காளியம்மன்கோயில் பகுதியைச்  சேர்ந்தவர் வெற்றிவேல்(55). பால் வியாபாரம் செய்து வருகிறார். இதே தெருவில் சிறிது தூரம் தள்ளி புதிய வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு புதிய வீட்டில் வெற்றிவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கியுள்ளனர். 
வெள்ளிக்கிழமை காலையில் பழைய  வீட்டிற்கு வந்தபோது வீடு திறந்து கிடப்பதைக் கண்டார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த 15 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து வெற்றிவேல் அளித்தப் புகாரின் பேரில்  சின்னமனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com