சிறுமிக்கு பாலியல் தொல்லை: "போக்சோ' சட்டத்தில் இளைஞர் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  இளைஞரை "போக்சோ' சட்டத்தின் கீழ் போலீஸார்  வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தேனி மாவட்டம், கம்பத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  இளைஞரை "போக்சோ' சட்டத்தின் கீழ் போலீஸார்  வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கம்பம் சுருளிப்பட்டி சாலையைச்  சேர்ந்த இரண்டாம்  வகுப்பு படிக்கும், 7 வயது சிறுமியின் தாயார், கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் வியாழக்கிழமை, ஒரு புகார் மனு அளித்தார். அதில், இதேபகுதியைச் சேர்ந்த கூலிவேலை செய்து வரும்  நாச்சிமுத்து (33) என்ற இளைஞர், அப்பகுதியில் உள்ள கோயில் அருகே எனது 7 வயது மகளை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  இதை யாரிடமாவது கூறினால்  கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.  இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து சிறுமிக்கு கம்பம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.  
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் எஸ். சுப்புலட்சுமி,  "போக்சோ' சட்டத்தின் கீழ்  நாச்சிமுத்துவை கைது செய்தார். அவரை உத்தமபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com