உத்தமபாளையம் அருகே கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
உத்தமபாளையம் மற்றும் சின்னமனூர் ஒன்றியத்திற்கிடையே புலிக்குத்தி மற்றும் அம்மாபட்டி கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு இடையே ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிற்கு விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களுக்கு செல்ல போதுமான சாலை வசதியில்லாத காரணத்தால் விவசாயிகள் பல கிலோ மீட்டர் சுற்றிச் சென்றனர். இதனை அடுத்து விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று அம்மாபட்டி - புலிக்குத்தி இடையே இணைப்புச் சாலை அமைக்கப்பட்டது. 
 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு  அமைக்கப்பட்ட இச்சாலை முறையாக பராமரிப்பு செய்யாத நிலையில் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியதால்  வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று,  இச்சாலையை சீரமைக்க 2 ஆண்டுக்கு முன்பு ரூ.79 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
இதில் சின்னமனூர் ஒன்றியத்திற்குள்பட்ட 3 கிலோ மீட்டர் சாலை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தன. உத்தமபாளையம் ஒன்றியத்தை சேர்ந்த 3 கிலோ மீட்டர் சாலைப் பணி மட்டும் பல மாதங்களாக  கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இச்சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com