கூடலூரில் மணல் கடத்திய 2 பேர் கைது: டிராக்டர் பறிமுதல்
By DIN | Published On : 06th May 2019 12:59 AM | Last Updated : 06th May 2019 12:59 AM | அ+அ அ- |

கூடலூரில் சனிக்கிழமை மணல் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்து, 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் மணல் கடத்துவதாக வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீஸார் 18 ஆம் கால்வாய் பகுதி, ஏகழூத்துச் சாலை ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது ஏகழூத்து குளத்து பகுதியிலிருந்து, மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்திச் சோதனையிட்டனர்.
விசாரணையில், குளத்துப் பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீஸார் டிராக்டரை ஓட்டி வந்த பஞ்சராஜா (39) மற்றும் செல்வராஜ் (35) ஆகிய 2 பேரைக் கைது செய்தனர். மேலும் டிராக்டரை பறிமுதல் செய்து, உத்தமபாளையம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.