சின்னமனூரில் நகராட்சிக்குச் சொந்தமான குளங்கள் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் புகார்

தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சிக்கு சொந்தமான குளங்கள் ஆக்கிரமிப்பு காரணமாக அழிந்து வருவதை தடுத்த

தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சிக்கு சொந்தமான குளங்கள் ஆக்கிரமிப்பு காரணமாக அழிந்து வருவதை தடுத்த நிறுத்த வேண்டும் என  பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 சின்னமனூரில் முல்லைப் பெரியாறு பாசன நீர் மூலமாக சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு இரு போக நெற்பயிர் விவசாயம் நடைபெறுகிறது. அதே போல, வாழை , தென்னை, கரும்பு உள்ளிட்ட  அனைத்து வகையான காய்கறி விவசாயங்களும் அதிகளவில் நடைபெறுகிறது. 
 இங்கிருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு காய்கறிகள் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இது தவிர,  நிலக்கடலை, மக்காச்சோளம், கம்பு, எள், பாசிப்பயறு வகைகளும் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன.
இதனால், சின்னமனூரில் பகுதியில் ஆங்காங்கே சிறிய குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் மழைக் காலங்களில்  தண்ணீரை தேக்கி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்ந்தி, விவசாயப் பணிகள் ஆண்டும் தோறும் நடைபெறுகிறது. தவிர, மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கும் முக்கிய நீராதாரமாக உள்ளன. இந்நிலையில்,  இந்த  குளங்கள் தற்போது ஆக்கிரமிப்பில் சிக்கி , தினமும் கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கிச் செல்வதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
 இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இங்குள்ள விஸ்வன் குளம், ஆலமரக்குளம் உள்ளிட்ட  5- க்கும் மேற்பட்ட குளங்கள் மழை நீரை தேக்கிக் கொள்ள அந்த காலத்தில்  தானமாக வழங்கப்பட்டவை. தற்போது, நகராட்சியின் கீழ் உள்ள இவற்றை உரிய வகையில் பராமரிப்பு செய்யாமல்,  ஆக்கிரமிப்புகள் அதிகமாகி, வீட்டு மனைகளாக மாறிவிட்டன. விஸ்வன்குளத்தில் 20 -க்கும் மேற்பட்ட  கட்டுமானப் பணிகள் நடைபெற்று குளமே இல்லாத நிலைக்குச் சென்று விட்டது.  இதே போன்று, தற்போது பல்வேறு குளங்களும் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன என்றனர்.
 எனவே,  சின்னமனூரில் நகராட்சிக்கு சொந்தமான இந்த குளங்கள், நீர்நிலைகளை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com