தேனியில் மறு வாக்குப் பதிவைத் தடுக்க எதிர்க்கட்சிகள் திட்டம்: அதிமுக வேட்பாளர்கள் புகார்

தேனி மாவட்டத்தில் இம்மாதம் 19 ஆம் தேதி மறு வாக்குப் பதிவு நடைபெற உள்ள இரு வாக்குச் சாவடிகளில்

தேனி மாவட்டத்தில் இம்மாதம் 19 ஆம் தேதி மறு வாக்குப் பதிவு நடைபெற உள்ள இரு வாக்குச் சாவடிகளில் கலவரம் ஏற்படுத்தி, வாக்குப் பதிவைத் தடுக்க எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்று பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை பெரியகுளம் சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் மயில்வேல், ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.லோகிராஜன் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமியிடம் தனித் தனியே அளித்த மனு விபரம்: பெரியகுளம் சட்டப் பேரவை தொகுதியில் உள்ள வடுகபட்டி, ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள பாலசமுத்திரம் வாக்குச் சாவடிகளில் மே 19-ம் தேதி மறு வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த இரு வாக்குச் சாவடிகளிலும் மறு வாக்குப் பதிவு நாளில் கலவரத்தை ஏற்படுத்தவும், வாக்காளர்களை அச்சுறுத்தி வாக்களிக்க விடாமல் தடுப்பதற்கும் திமுக, காங்கிரஸ், அமமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 
மறு வாக்குப் பதிவு நடைபெறும் வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கவும், வாக்குப் பதிவை குலைக்கும் செயலில் ஈடுபடக் கூடியவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com