Enable Javscript for better performance
கடமலைக்குண்டு பகுதியில் பலத்த மழை- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு பகுதியில் வியாழக்கிழமை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.  
    தேனி மாவட்டத்தில் மலைகள் மற்றும் வனப்பகுதிகள் அதிகம் உள்ள கடமலை மயிலை ஒன்றியத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் திடீரென மழை பெய்தது. கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, துரைச்சாமிபுரம், ஆத்தங்கரைப்பட்டி, கண்டமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் வெயிலால் அவதியுற்ற மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேநேரத்தில் வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான வருசநாடு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai