முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் திருட்டை தடுக்க குழு அமைப்பு

தினமணி செய்தி எதிரொலியாக முல்லைப் பெரியாற்றில் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதைத்

தினமணி செய்தி எதிரொலியாக முல்லைப் பெரியாற்றில் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதைத் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
 முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.இந்த தண்ணீர் லோயர்கேம்ப் முதல் குன்னூர் வரை பல்வேறு இடங்களில் டீசல் மற்றும் மின் மோட்டார் மூலம் உறிஞ்சப்பட்டு பண்ணை விவசாயம் மற்றும் கட்டுமானப் பணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படுவதால் முல்லைப் பெரியாறு தண்ணீர் வரத்தின்றி காணப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டும், வைகை அணைக்கு தண்ணீர் வரத்து குறைவாகவே உள்ளது. 
இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை தினமணியில் செய்தி வெளியாகி இருந்தது.  இந்த நிலையில், முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் திருட்டை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் துறை, பொதுப் பணித்துறை, மின் வாரியம் மற்றும் சம்மந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் முல்லைப் பெரியாற்றங்கரையோரப் பகுதிகளில் கூட்டாய்வு மேற்கொண்டு, ஆற்றுப் படுகையில் அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டார் பம்புகளை பறிமுதல் செய்து வருகின்றனர் என்று மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com