முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
தேனி அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் சாவு
By DIN | Published On : 18th May 2019 06:58 AM | Last Updated : 18th May 2019 06:58 AM | அ+அ அ- |

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் கிணற்றில் மூழ்கி மாணவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், தர்மபுரியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் ஜெகன்(18). 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் ராணுவப் பயிற்சிப் பள்ளியில் படித்து வந்தார்.
ராணுவப் பயிற்சிப் பள்ளி அருகே உள்ள தனியார் தோட்டத்துக் கிணற்றில் குளிப்பதற்காக ஜெகன் சென்றார். இதில் கிணற்றில் குதித்த ஜெகன், கிணற்றின் அடிப்பரப்பில் இருந்த சகதியில் சிக்கி, மேலே வரமுடியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஜெகனின் தந்தை தங்கவேல் அளித்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.