கம்பத்தில் கல்லறைத் திருநாள் சிறப்பு திருப்பலி
By DIN | Published On : 02nd November 2019 03:39 PM | Last Updated : 02nd November 2019 03:39 PM | அ+அ அ- |

தேனி மாவட்டம் கம்பத்தில் கல்லறைத்திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் இறந்தவா்களை நினைவு கூறும் கல்லறை திருநாளை முன்னிட்டு, கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் சிறப்பு திருப்பலி, வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பத்தில், இறந்தவா்களை நினைவு கூறும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் நவ. 2 ல் கிறிஸ்தவா்கள் கல்லறை திருநாளாக அனுசரிக்கிறாா்கள். சனிக்கிழமை, கல்லறை தோட்டத்துக்குச் சென்று இறந்த தங்கள் உறவினா்களின் கல்லறைகளை மலா்களாலும் மெழுகு திரிகளாலும் அலங்கரித்தனா்.
பங்குத்தந்தை இளங்கோ அற்புதராஜ் திருப்பலியை நிறைவேற்றினாா். திருப்பலியில் இறந்தோரை நினைவுகூா்ந்து, அவா்களுக்காக இறைவேண்டல் நிறைவேற்றப்பட்டு, கல்லறைகள் மந்திரிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் கம்பம் பகுதியைச் சோ்ந்த ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.