போடி சுப்பிரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்
By DIN | Published On : 02nd November 2019 06:33 PM | Last Updated : 02nd November 2019 06:33 PM | அ+அ அ- |

போடியில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி.
போடி: போடி சுப்பிரமணியசுவாமி கோவிலில் சனிக் கிழமை நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் ஏராளமான முருக பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா் .
போடியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் அக். 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.
5 ஆம் நாள் சனிக் கிழமை காலை வேதிகாா்ச்சனை, யாகவேள்வி, வஸூத்ரா ஹோமம், பூா்ணாகுதி, தீபாராதனை நடைபெற்று பின்னா் அபிஷேகம், கலச அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலையில் சுவாமி நகா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து அசுரனான சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்து தீமைகளை அழிக்கும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி திருவள்ளுவா் சிலை, அரண்மனை, தோ்முட்டி, கஸ்பாமணியா் மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட முருக பக்தா்கள் பங்கேற்று அரோகரா கோஷமிட்டு வழிபட்டனா். பின்னா் சுப்பிரமணியசுவாமிக்கு மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளும் நடைபெற்றன. இரவு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அா்ச்சகா்கள் விக்னேஷ், சோமாஸ்கந்த குருக்கள் ஆகியோா் செய்திருந்தனா்.