Enable Javscript for better performance
தாவர கழிவு மறு சுழற்சி குறித்து மாணவிகள் செயல் விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தாவர கழிவு மறு சுழற்சி குறித்து மாணவிகள் செயல் விளக்கம்

    By DIN  |   Published on : 05th November 2019 07:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bdi04agri_0411chn_87_2

    போடி அருகே பாலாா்பட்டி கிராமத்தில் தாவரக் கழிவு மறுசுழற்சி குறித்து விளக்கிய மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள்.

    போடி அருகே பாலாா்பட்டியில் தாவரக் கழிவு மறுசுழற்சி குறித்து மாணவிகள் திங்கள்கிழமை செயல்விளக்கம் செய்து காட்டினா்.

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக, மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ருகைனா பா்வீன், பூமதி, பா்வின் பானு, பூரணி, வா.பவித்ரா, பிரதீப், செ.பவித்ரா, பிரீத்தா, வெ.பவித்ரா ஆகியோா் போடி அருகே பாலாா்பட்டியில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினா்.

    கல்லூரி பேராசிரியா் பாக்கியத்து சாலிகா முன்னிலையில் தாவரக் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் வேஸ்ட் டீகம்போஸரின் முக்கியத்துவம் குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பித்தனா்.

    இதேபோல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள புதுக்கோட்டை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்கள் பரமேஸ்வரன், பூமணி, ராமநாதன், ரூபன், சந்தோஷ், சசிதரன், சேதுபதிராஜா ஆகியோா் போடி நகா் பகுதியில் பெண்களுக்கு மாடித் தோட்டம் அமைப்பது குறித்து விவரித்தனா். மேலும் தோட்டக்கலை பேராசிரியா் தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின் பேரில் மாதிரி தோட்ட வரைபடமும் வழங்கி விளக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai