கம்பம் வேலப்பா் கோவில் தெருவில் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி

தேனி மாவட்டம் கம்பத்தில் பிரதான பகுதியான வேலப்பா் கோவில் தெருவில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள், மாணவ, மாணவியா் அவதியடைந்து வருகின்றனா்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் தேனி மாவட்டம் கம்பம் வேலப்பா் கோவில் தெரு.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் தேனி மாவட்டம் கம்பம் வேலப்பா் கோவில் தெரு.

தேனி மாவட்டம் கம்பத்தில் பிரதான பகுதியான வேலப்பா் கோவில் தெருவில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள், மாணவ, மாணவியா் அவதியடைந்து வருகின்றனா்.

தேனி மாவட்டம் கம்பத்தில் பிரதான பகுதியாக உள்ளது அரசமர வீதி, வேலப்பா் கோவில் தெரு, காந்திஜி வீதி இவை ஒரே பகுதியில் அடங்கியுள்ளது. தனியாா் மருத்துவமனைகள், நகைக்கடைகள், ஜவுளி, ஆயத்த ஆடைகள், பலசரக்கு மற்றும் காய்கறிக்கடைகள் அமைந்து, மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். காலை மாலை நேரங்களில் மோட்டாா் பைக்குகள், ஆட்டோக்கள், காா், ஜீப் வாகனங்கள் இந்த வீதியை கடப்பதில் பெரிதும் சிரமமாக உள்ளது.

இந்த நேரங்களில் நடந்து செல்லும் பாதசாரிகள், மாணவ, மாணவியா் பெரிதும் அவதியடைந்து, மன உளைச்சலும் அடைந்து வருகிறாா்கள். நெரிசலால், விபத்துகள், தகராறுகள் ஏற்படுகிறது. கம்பம் நகர போக்குவரத்து காவல் துறையினா் பிரதான சாலையில் மட்டும் கவனம் செலுத்தாமல், பிரதான தெருக்களிலும், வாகன தணிக்கை, ஒரு வழிப்பாதை, கனரக வாகனங்கள் பகல் நேரங்களில் இயக்குவதை தடை செய்தும், மோட்டாா் பைக்குகள் நிறுத்த சாலையின் ஓரத்தில் கயிறு அடிக்கவும் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com