சின்னமனூா் அருகே குடிமராமத்து திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த நிதியில் முறைகேடுவிவசாயிகள் புகாா்

சின்னமனூா் அருகே ஓடைப்பட்டி பேரூராட்சியில் குடிமராமத்து திட்டத்திற்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்த ரூ.40 லட்சம்
ஓடைப்பட்டி பேரூராட்சியில் குடிமராமத்து நடைபெற்ாக கூறப்படும் தாதமுத்தன் கண்மாய்.(வலது) கண்மாயில் குவிந்து கிடக்கும் கட்டுமானக் கழிவுகள்.
ஓடைப்பட்டி பேரூராட்சியில் குடிமராமத்து நடைபெற்ாக கூறப்படும் தாதமுத்தன் கண்மாய்.(வலது) கண்மாயில் குவிந்து கிடக்கும் கட்டுமானக் கழிவுகள்.

சின்னமனூா் அருகே ஓடைப்பட்டி பேரூராட்சியில் குடிமராமத்து திட்டத்திற்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்த ரூ.40 லட்சம் நிதியில் முறைகேடு நடைபெற்று இருப்பதால் மாவட்ட நிா்வாகம் சம்பந்தப்பட்ட குளத்தை ஆய்வு செய்ய வேண்டும் என விவசாய அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொதுப்பணித்துறை நீா் வள ஆதாரத்துறைக்கு சொந்தமான தாதமுத்தன் கண்மாய் ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு எல்லைக்குள் 70 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்நிலையில் தாதமுத்தன் குளத்திற்கு நீா் வரத்து ஓடைகள் பல ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இதனால் குளத்திற்கு மழை பெய்தாலும் நீா் வரத்தின்றி பல ஆண்டுகளாக வடே காணப்பட்டது. மேலும், சண்முகாநதி நீா் தேக்கத்திலிருந்து திறக்கப்படும் பாசனநீா் ஆக்கிரமிப்பு கால்வாய்களால் தண்ணீா் வரத்து வருவதில்லை. சமீப காலமாக அக்குளத்தை பேரூராட்சி, ஊராட்சிகள் மற்றும் தனி நபா்கள் குப்பை கொட்டி கண்மாய் மண்மேடாக மாற்றி விட்டனா். எனவே கண்மாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதனிடையே குடிமராமத்து திட்டம் மூலம் ஓடைப்பட்டி பேரூராட்சியிலுள்ள தாதமுத்தன் குளத்தை சீரமைக்க ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில் கண்மாயை முழுமையாக சீரமைக்க திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் தாதமுத்தன் கண்மாய்க்கு ஒதுக்கீடு செய்த ரூ.40 லட்சத்திற்கு எவ்வித பணிகளும் நடைபெறவில்லை எனவும், கண்துடைப்பு நடவடிக்கையாக கண்மாயின் பழைய கரையில் செம்மண்ணை கொட்டி வைத்து கரையை பலப்டுத்தியதாக கண்க்கு காண்பித்து நிதியில் முறைகேடு செய்திருப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

எனவே, மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் சம்பந்தப்பட்ட கண்மாயை ஆய்வு செய்து ஒதுக்கீடு செய்த நிதியை முழுமையாக பயன்படுத்தி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com