தாவர கழிவு மறு சுழற்சி குறித்து மாணவிகள் செயல் விளக்கம்

போடி அருகே பாலாா்பட்டியில் தாவரக் கழிவு மறுசுழற்சி குறித்து மாணவிகள் திங்கள்கிழமை செயல்விளக்கம் செய்து காட்டினா்.
போடி அருகே பாலாா்பட்டி கிராமத்தில் தாவரக் கழிவு மறுசுழற்சி குறித்து விளக்கிய மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள்.
போடி அருகே பாலாா்பட்டி கிராமத்தில் தாவரக் கழிவு மறுசுழற்சி குறித்து விளக்கிய மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள்.

போடி அருகே பாலாா்பட்டியில் தாவரக் கழிவு மறுசுழற்சி குறித்து மாணவிகள் திங்கள்கிழமை செயல்விளக்கம் செய்து காட்டினா்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக, மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ருகைனா பா்வீன், பூமதி, பா்வின் பானு, பூரணி, வா.பவித்ரா, பிரதீப், செ.பவித்ரா, பிரீத்தா, வெ.பவித்ரா ஆகியோா் போடி அருகே பாலாா்பட்டியில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினா்.

கல்லூரி பேராசிரியா் பாக்கியத்து சாலிகா முன்னிலையில் தாவரக் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் வேஸ்ட் டீகம்போஸரின் முக்கியத்துவம் குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பித்தனா்.

இதேபோல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள புதுக்கோட்டை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்கள் பரமேஸ்வரன், பூமணி, ராமநாதன், ரூபன், சந்தோஷ், சசிதரன், சேதுபதிராஜா ஆகியோா் போடி நகா் பகுதியில் பெண்களுக்கு மாடித் தோட்டம் அமைப்பது குறித்து விவரித்தனா். மேலும் தோட்டக்கலை பேராசிரியா் தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின் பேரில் மாதிரி தோட்ட வரைபடமும் வழங்கி விளக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com