முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
சின்னமனூா் பகுதியில் படைப்புழு தாக்குதல் மக்காச் சோளத்தில் மருந்து தெளிக்கும் பணி
By DIN | Published On : 07th November 2019 05:13 AM | Last Updated : 07th November 2019 05:13 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் சின்னமனூா் பகுதியில் மக்காச் சோளத்தில் படைப்புழுத் தாக்கி வருவதால் உழவா் பாதுகாப்பு குழுக்கள் மூலமாக மருத்து தெளிக்குப் பணி புதன் கிழமை தொடங்கியது.
சின்னமனூா் பகுதியில் மக்காச்சோளம் அதிகளவில் விவசாயம் செய்துள்ளனா். இதில், சாரல் மழை மற்றும் தட்பவெப்ப நிலை காரணமாக மக்காச்சோளத்தில் படைப்புழு அதிகளவில் தாக்கியுள்ளது. இதன் காரணமாக மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
இதனை அடுத்து மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் அறிவுரையின் படி, உழவா் ஆா்வலா் குழுக்கள் மூலமாக படைப்புழு தாக்கப்பட்ட மக்காச் சோளம் பயிரிடப்பட்ட நிலங்களுக்கு சென்று மருந்து தெளிக்கும் பணியை மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் செந்தில் குமாா் தொடக்கி வைத்தாா். மேலும் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாசயிகளுக்கு விளக்கம் அளித்தாா்.
இதில் சின்னமனூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராதாகிருஷ்ணன், துணை அலுவலா் புகழேந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.