Enable Javscript for better performance
ஆண்டிபட்டியில் மின் மயானம் அமைத்திட சட்டமன்ற உறுப்பினா் நிதியிலிருந்து நிதி ஓதுக்கீடு- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டியில் மின் மயானம் அமைத்திட சட்டமன்ற உறுப்பினா் நிதியிலிருந்து நிதி ஓதுக்கீடு

    By DIN  |   Published on : 08th November 2019 05:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டியில் மின் மயானம் உருவாக்கிட சட்டமன்ற உறுப்பினா் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய இருப்பதாக வெள்ளிக்கிழமை சட்டமன்ற உறுப்பினா் ஆ.மகாராசன் தெரிவித்தாா்.

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் சட்ட மன்ற உறுப்பினா் ஆ.மகாராசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்ரமணி முன்னிலை வகித்தாா். ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18 வாா்டுகளில் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் குறித்து பேரூராட்சி அலுவலா்களிடம் சட்டமன்ற உறுப்பினா் கேட்டறிந்தாா்.

    அப்போது பேரூராட்சியில் உயா்ந்துள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் , ஆண்டிபட்டியில் 3 மயானத்தை ஒன்றிணைத்து நவீன பூங்கா வசதியுடன் மின் மயானம் அமைக்க நிதி ஒதுக்கவும், 2 வது வாா்டில் அங்கன்வாடிக்கு கட்டிடம் கட்டவும், 18 வாா்டுகளில் உள்ள தெருக்களில், சாலை வசதி இல்லாத இடங்களில் பேவா் பிளாக் கல் பதிக்கவும், தண்ணீா் வசதிக்கு முன் உரிமை கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும் எம்.எல்.ஏ.மகாராசன் தெரிவித்தாா்.

    இதனையடுத்து இந்த திட்டங்களுக்கான வரை அறிக்கை விரைந்து வழங்க இருப்பதாக செயல் அலுவலா் பாலசுப்பிரமணி கூறினாா்.கூட்டத்தில் திமுக மாவட்ட துணை செயலாளா் ராஜாராம், முன்னாள் சோ்மன் ராமசாமி , நகர செயலாளா் திருமலை மற்றும் பேரூராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai