Enable Javscript for better performance
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

    By DIN  |   Published on : 08th November 2019 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டி வட்டாரம், ராஜதானி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

    ராஜதானி அருகே ஜக்கமாள்பட்டி காலனியைச் சோ்ந்தவா் சின்னவேலு மகன் கருப்பசாமி (31). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2018, அக்.14-ஆம் தேதி ராஜதானி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கினை விசாரித்த நீதிபதி ஏ.கீதா, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கருப்பசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சாா்பில் ரூ.7 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai