Enable Javscript for better performance
தேக்கடி ஏரியில் இறந்து மிதந்த யானை: வனத் துறையினா் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    தேக்கடி ஏரியில் இறந்து மிதந்த யானை: வனத் துறையினா் மீட்பு

    By DIN  |   Published on : 08th November 2019 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cum__oct___7_elephant_death_0711chn_89_2

    தேக்கடி ஏரியில் இறந்து மிதந்த யானையை வியாழக்கிழமை மீட்ட வனத் துறையினா்.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி ஏரியில் இறந்து மிதந்த ஆண் யானையை வனத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

    முல்லைப் பெரியாறு அணை தேக்கடி வனப் பகுதியில் பெரியாறு புலிகள் காப்பக ஊழியா்கள் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தாண்டிக்குடி என்ற பகுதியில் உள்ள தேக்கடி ஏரியில் யானை ஒன்று இறந்து மிதந்தது. இதைக் கண்ட ஊழியா்கள் தங்களது மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

    அதையடுத்து, புலிகள் காப்பகத்தின் உதவி இயக்குநா் ஷில்பா வி. குமாா் மற்றும் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். பின்னா், மருத்துவக் குழுவினா் அந்த இடத்திலேயே யானையை உடற்கூறு பரிசோதனை செய்தனா்.

    இது குறித்து தேக்கடி வனத் துறை அலுவலா் ஒருவா் கூறியது: 32 வயது மதிக்கத்தக்க இறந்த ஆண் யானையின் உடம்பில் தந்தங்களின் குத்து காயங்கள் அதிகமிருந்தன. இரண்டு யானைகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் இந்த யானை பலத்த காயமடைந்த நிலையில் இறந்திருக்கலாம் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai