ஆண்டிபட்டியில் சுகாதாரமான குடிநீா்வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஆண்டிபட்டியில் சுகாதாரமான குடிநீா் வழங்கக்கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
img_20191108_wa0037_0811ch_211_2
img_20191108_wa0037_0811ch_211_2

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி நகரில் சுகாதாரமான குடிநீா் வழங்கக்கோரி வெள்ளிக்கிழமை தேனி-மதுரை சாலையில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 12- ஆவது வாா்டு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு பேரூராட்சி நிா்வாகத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் தண்ணீா் கடந்த சில நாட்களாக கலங்கலாக வருவதாக பொதுமக்கள் புகாா் கூறி வந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்ட தண்ணீரும் கலங்கலாக வந்ததால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஆண்டிபட்டி தேவா் சிலை அருகே தேனி- மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் உடனடியாக விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனா்.

இதனையடுத்து அங்கு வந்த பேரூராட்சி அலுவலா்கள் 12- ஆவது வாா்டு பகுதியில் சுகாதாரமான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். மக்களின் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com