‘இரு சக்கர வாகனத்துக்கு மானியம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்’

தேனி மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகன மானிய திட்டத்தின் கீழ், இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம்

தேனி மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகன மானிய திட்டத்தின் கீழ், இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் பெற விரும்பும் பெண்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகன மானியம் திட்டத்தின் கீழ், 2019-20-ஆம் ஆண்டில் மொத்தம் 1,776 பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்கப்பட உள்ளது. இத் திட்டத்தின் கீழ், இரு சக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ. 25 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.

தனியாா் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் தொகுப்பூதியம், தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண்கள், வங்கி ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் வழிநடத்துநா்கள், சமூக சுகாதாரப் பணியாளா்களாகப் பணிபுரியும் 18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட பெண்கள் இரு சக்கர வாகன மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு உள்பட்டிருக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுநா் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

தகுதியுள்ளவா்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பப் படிவும் பெற்று, உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com