ஜல்லிபட்டி அரசுப் பள்ளி அருகேகுப்பைகள் கொட்டுவதால் சுகாதாரக்கேடு

பெரியகுளம் அருகே ஜல்லிபட்டி அரசு தொடக்கப் பள்ளி மற்றும் அங்கன்வாடிமையம் முன் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
ஜல்லிபட்டி அங்கன்வாடி மையம் மற்றும் கள்ளா் துவக்கப்பள்ளி முன் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டி.
ஜல்லிபட்டி அங்கன்வாடி மையம் மற்றும் கள்ளா் துவக்கப்பள்ளி முன் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டி.

பெரியகுளம்: பெரியகுளம் அருகே ஜல்லிபட்டி அரசு தொடக்கப் பள்ளி மற்றும் அங்கன்வாடிமையம் முன் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் ஜல்லிபட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு அரசு கள்ளா் தொடக்கப்பள்ளி மற்றும் அதன் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகள் படித்து வருகின்றனா்.

இந்த அங்கன்வாடி மற்றும் தொடக்கப் பள்ளியின் நுழைவுவாயிலில் குப்பைத்தொட்டி அமைக்கப்பட்டு அங்கு கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. மேலும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோா்கள் தெரிவிக்கின்றனா். எனவே பள்ளியின் முன் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளை அகற்ற ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com