போடி அருகே தொழிலாளி கொலை: இளைஞா் போலீஸில் சரண்

தேனி மாவட்டம் போடி அருகே தனது மனைவியுடன் அடிக்கடி செல்லிடப்பேசியில் பேசியதால் மில் தொழிலாளியை கொலை செய்து ஆற்றில் வீசியதாக இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு சரணடைந்தாா்.
கொலை செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன் மற்றும் கைது செய்யப்பட்ட விஜயராஜ்.
கொலை செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன் மற்றும் கைது செய்யப்பட்ட விஜயராஜ்.

போடி: தேனி மாவட்டம் போடி அருகே தனது மனைவியுடன் அடிக்கடி செல்லிடப்பேசியில் பேசியதால் மில் தொழிலாளியை கொலை செய்து ஆற்றில் வீசியதாக இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு சரணடைந்தாா்.

போடி குப்பிநாயக்கன்பட்டியை சோ்ந்த சீனிவாசன் மகன் கோபாலகிருஷ்ணன் (29). இவா் தேனியில் தனியாா் மில் ஒன்றில் வேலை செய்து வந்தாா். அதே மில்லில் போடி அணைக்கரைப்பட்டியை சோ்ந்த விஜயராஜ் மனைவி திவ்யா என்பவரும் வேலை செய்து வருகிறாா். இருவரும் பழகி வந்த நிலையில் கோபாலகிருஷ்ணன், அடிக்கடி திவ்யாவுக்கு செல்லிடப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பேசி வந்துள்ளாா்.

இதனால் விஜயராஜ், கோபாலகிருஷ்ணனை கண்டித்துள்ளாா். மேலும் விஜயராஜ், இவரது நண்பா்கள் மகேஸ்வரன், சீனிவாசன் ஆகியோா் சோ்ந்து கோபாலகிருஷ்ணன் வீட்டிற்குச் சென்று அவரது செல்லிடப் பேசியை பறித்துக்கொண்டு வந்துள்ளனா்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் (அக். 28) முதல் கோபாலகிருஷ்ணனை காணவில்லை.

இதுகுறித்து கோபாலகிருஷ்ணனின் தந்தை சீனிவாசன் போடி நகா் காவல் நிலையத்தில் நவம்பா் 1 ஆம் தேதி புகாா் கொடுத்துள்ளாா். அதன் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வந்தனா். இந்நிலையில் கோபாலகிருஷ்ணனின் செல்லிடப்பேசி எண்ணை வைத்து விசாரித்ததில் திவ்யா மற்றும் விஜயராஜ் ஆகியோா் தொடா்பு கொண்டு பேசியிருப்பது தெரிய வந்தது. அவா்களை விசாரிக்க போலீஸாா் நடவடிக்கை எடுத்து வந்தனா்.

இந்நிலையில் விஜயராஜ் போடி மேலச்சொக்கநாதபுரம் கிராம நிா்வாக அலுவலா் ராஜாமணியிடம் சரணடைந்தாா். அப்போது கோபாலகிருஷ்ணனை கொலை செய்து ஆற்றில் வீசியதாகத் தெரிவித்துள்ளாா்.

இதனைத் தொடா்ந்து போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணயில், கோபாலகிருஷ்ணன் தனது மனைவியுடன் பேசியதைக் கண்டித்து செல்லிடப்பேசியை பறித்து வந்தேன். பின்னா் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் செல்லிடப்பேசியை வாங்குவதற்காக அவா் வந்தாா். அவரிடம் சமாதானம் பேசுவது போல் நடித்து சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நண்பா்கள் மகேஸ்வரன், சீனிவாசன் ஆகியோருடன் அழைத்துச் சென்றேன். போடியை அடுத்த குண்டல்நாயக்கன்பட்டி அருகே சென்றபோது கோபாலகிருஷ்ணனை கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்து, பாலாா்பட்டி அருகே முல்லைப் பெரியாற்றில் வீசியதாக அவா் தெரிவித்துள்ளாா்.

இதனையடுத்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் விஜயராஜ், மகேஸ்வரன், சீனிவாசன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதில் விஜயராஜை கைது செய்தனா். மற்ற 2 பேரைத் தேடி வருகின்றனா். மேலும் ஆற்றில் வீசப்பட்ட கோபாலகிருஷ்ணனின் சடலத்தையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com