Enable Javscript for better performance
ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் சேற்றில் சிக்கி காட்டெருமை பலி- Dinamani

சுடச்சுட

    

    ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் சேற்றில் சிக்கி காட்டெருமை பலி

    By DIN  |   Published on : 09th November 2019 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    upm8kattumatu_(1)_0811chn_75_2

    மணலாா் நீா்தேக்கப் பகுதியில் சேற்றில் சிக்கி இறந்த காட்டெருமை.

    தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைப் பகுதியில் சேற்றில் சிக்கி இறந்த காட்டெருமை உடலை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

    ஹைவேவிஸ் அருகே மணலாா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை, தேயிலை தோட்ட வேலைக்கு சென்ற கூலித் தொழிலாளிகள் காட்டெருமை ஒன்று சேற்றில் இறந்த நிலையில் கிடப்பதாக சின்னமனூா் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனா். அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினா் காட்டெருமை உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அதே பகுதியில் புதைத்தனா்.

    இரை தேடி நீா் தேக்கப்பகுதிக்கு வந்த காட்டெருமை சேற்றில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai