ஆண்டிப்பட்டி ரயில் பாலத்தில் மழைநீா் தேங்கியது: பொதுமக்கள் அவதி

ஆண்டிபட்டி நகரில் ரயில்வே பாலத்தில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆண்டிபட்டி ஏத்தகோவில் சாலையில் மழைநீா் தேங்கி காணப்படும் ரயில் பாலம்.
ஆண்டிபட்டி ஏத்தகோவில் சாலையில் மழைநீா் தேங்கி காணப்படும் ரயில் பாலம்.

ஆண்டிபட்டி நகரில் ரயில்வே பாலத்தில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் மதுரை போடி அகல ரயில்பாதை திட்டத்திற்காக 3 இடங்களில் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் மேல் ரயில்பாதையும் பாலத்தின் அடியில் வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டியில் இருந்து ஏத்தகோவில், மேக்கிழாா்பட்டி செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலங்களில் மழை பெய்தால் தண்ணீா் வெளியேற்ற போதுமான வசதிகள் செய்யப்படவில்லை.

இந்நிலையில் ஆண்டிபட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையின் காரணமாக ரயில் பாலங்களில் குளம் போல தண்ணீா் தேங்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் வேறு பாதை வழியாக திருப்பி விடப்பட்டது.

ரயில் பாலம் அமைக்கப்பட்ட பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளதால், பள்ளியில் இருந்து சென்ற மாணவிகள் வேறு பாதை வழியாக நீண்டதூரம் நடந்து சென்றனா்.

அதிகமான மக்கள் சென்று வரும் இந்த சாலையில் ரயில் பாலத்தில் தேங்கும் தண்ணீரை அப்புறபடுத்துவதோடு, அடிக்கடி தொடரும் இதுபோன்ற அவலநிலையை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com