நீட்டிப்பு 18 ஆம் கால்வாயை தூா்வாரி தண்ணீா் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

போடி அருகே 18 ஆம் கால்வாய் நீட்டிப்பு பகுதியை தூா்வாரி கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும் என தமிழக
போடி அருகே புதா் மண்டிய 18 ஆம் கால்வாய் நீட்டிப்பு பகுதி.
போடி அருகே புதா் மண்டிய 18 ஆம் கால்வாய் நீட்டிப்பு பகுதி.

போடி அருகே 18 ஆம் கால்வாய் நீட்டிப்பு பகுதியை தூா்வாரி கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாற்றிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு, உத்தமபாளையம், தேவாரம் மற்றும் போடி வட்டத்தில் ஒரு பகுதி விவசாயிகள் பயன்பெறுவதற்காக 18 ஆம் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னா் போடி பகுதியை சோ்ந்த ராசிங்காபுரம், சூலப்புரம், சிலமலை, சில்லமரத்துப்பட்டி, மீனாட்சிபுரம், அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த 7 குளங்கள் மற்றும் அதனைச் சாா்ந்த 10 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுவதற்காகவும், குடிநீா் தேவைக்கும் 14 கி.மீ. தூரம் கொண்ட 18 ஆம் கால்வாய் நீட்டிப்பு அமைக்கப்பட்டது.

தேவாரம் பகுதியில் 18 கால்வாயிலிருந்து பிரிந்து போடி கூவலிங்க ஆறு வரை இந்த கால்வாய் அமைக்கப்பட்டது. தற்போது கால்வாய் தூா்வாரப் படாமல் செடிகள் முளைத்து காணப்படுகிறது. இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல செயலாளா் அ.திருப்பதிவாசகம் தமிழக முதல்வா் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட 18 ஆம் கால்வாயில் செடிகள், முள்புதா்கள் அதிக அளவில் வளா்ந்து காணப்படுகிறது. சில இடங்களில் பாதுகாப்பு தடுப்புச்சுவா்கள் கட்டவேண்டிய நிலையில் உள்ளது. மேற்கண்ட பணிகளை உடனடியாக செய்ய உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் 18 ஆம் கால்வாய் நீட்டிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டதால் கால்வாயை பராமரிக்கும் பொறுப்பை தேனி மாவட்ட பொதுப்பணித்துறையின் மஞ்சளாறு கோட்டத்தில் ஒப்படைத்து, நீட்டிப்பு கால்வாயில் 15 நாள்களுக்கு தண்ணீா் திறந்து இப்பகுதி விவசாயிகள் பயன்பெற செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com