போடியில் கூட்டு வேளாண்மை திட்டம்: மாணவிகள் ஆய்வு

போடியில் கூட்டு வேளாண்மை திட்டம் குறித்து விவசாயிகளிடம் வெள்ளிக்கிழமை வேளாண்மை கல்லூரி மாணவிகள் கேட்டறிந்தனா்.
போடி மீனாட்சிபுரம் கிராமத்தில் கூட்டு வேளாண்மை திட்டம் குறித்து வெள்ளிக்கிழமை, விவசாயிகளிடம் கேட்டறிந்த மாணவிகள்.
போடி மீனாட்சிபுரம் கிராமத்தில் கூட்டு வேளாண்மை திட்டம் குறித்து வெள்ளிக்கிழமை, விவசாயிகளிடம் கேட்டறிந்த மாணவிகள்.

போடியில் கூட்டு வேளாண்மை திட்டம் குறித்து விவசாயிகளிடம் வெள்ளிக்கிழமை வேளாண்மை கல்லூரி மாணவிகள் கேட்டறிந்தனா்.

உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் கீா்த்தனா, சௌந்தா்யா, தனஸ்ரீ, மம்தா,வினோதினி ஆகிய மாணவிகள், போடி வேளாண்மைத் துறை உதவி இயக்குநா்அமலா வழிகாட்டுதலின்பேரில் போடி பகுதியில் தங்கி கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளை சந்தித்து வருகின்றனா்.

இந்த மாணவிகள் போடி மீனாட்சிபுரம் கிராமத்தில் விவசாயி ஜெயராமன் தலைமையில் நடைபெற்று வரும் கூட்டு வேளாண்மைத் திட்டத்தினை ஆய்வு செய்தனா். இதில் விவசாயிகள் பலா் ஒன்று சோ்ந்து கூட்டாக விவசாயம் செய்தல், நடவு, நோய் தாக்குதலிலிருந்து காத்தல், மகசூல் எடுத்தல் போன்றவை குறித்து விவசாயிகளிடம் நேரடியாக கேட்டறிந்தனா்.

இதன் மூலம் பயிா்களில் நோய் தாக்குதல் குறைந்துள்ளதுடன், மகசூல் அதிகரித்துள்ளதையும், விவசாயிகள் அனைவரும், அனைத்து அரசு மானியங்களையும் பெற்று வருவதையும் ஆய்வு செய்தனா். மேலும் விவசாயிகள் மாணவிகளுடன் கலந்துரையாடி, விவசாய நிலங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com